search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடந்த 20 நாட்களில் திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1 கோடி உண்டியல் வசூல்
    X

    கடந்த 20 நாட்களில் திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1 கோடி உண்டியல் வசூல்

    • திருத்தணி கோவிலில் தற்போது மாசி கிருத்திகை விழா தொடங்கி நடந்து வருகிறது.
    • திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணப்பட்டது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து செல்கிறார்கள். திருத்தணி கோவிலில் தற்போது மாசி கிருத்திகை விழா தொடங்கி நடந்து வருகிறது. இதனால் தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்யும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்தி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணப்பட்டது. மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் துணை ஆணையர் விஜயா முன்னிலையில் கோயில் ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர். இதில் கடந்த 20 நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 2 லட்சத்து 16 ஆயிரத்து 521 ரொக்கம் மற்றும் 612 கிராம் தங்கம், 10 கிலோ 487 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்து இருந்தது. இந்த தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×