என் மலர்
தமிழ்நாடு

X
கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய காங்கிரஸ்: காரணம் தெரியுமா?
By
மாலை மலர்9 Jan 2024 7:17 PM IST

- சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் பிரதமர் மோடியுடன் ராகுலை ஒப்பிட்டு பேசினார்.
- இதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். சிவகங்கை தொகுதி எம்.பி.யாக இருந்து வரும் இவர், காங்கிரஸ் தலைமையின் கருத்துக்கு எதிர் கருத்துக்களையும் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையே, சமீபத்தில் தனியார் சேனலுக்கு பேட்டியளித்த கார்த்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகரான தலைவர் யாரும் நாட்டில் இல்லை என வெளிப்படையாக கருத்து சொல்லியிருந்தார். இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரதமர் மோடியுடன் ராகுல் காந்தியை ஒப்பிட்டுப் பேசியதற்கு விளக்கம் கேட்டு சிவகங்கை எம்.பி. கார்த்திக்கிற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் குமாரசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Next Story
×
X