என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![பட்டாசு கடைகள் அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு பட்டாசு கடைகள் அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு](https://media.maalaimalar.com/h-upload/2024/10/04/5088373-fireworks.webp)
பட்டாசு கடைகள் அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இ-சேவை மையங்களிலும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
- இணையதளம் மூலமாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.
சென்னை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர், உரிய நிபந்தனைகளின்படி https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக வருகிற 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இ-சேவை மையங்களிலும் இதற்காக விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.
தற்காலிக பட்டாசு உரிமம் பெற பிற மாவட்டங்களில் உள்ளது போல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறை சென்னை போலீஸ் மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு, ஆவடி மற்றும் தாம்பரம் மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
மேற்கண்ட விண்ணப்பங்களை வருகிற 19-ந்தேதிக்குள் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.