என் மலர்
தமிழ்நாடு
த.வெ.க. முதல் மாநாடு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்
- மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
- விஜய் முக்கிய அறிவிப்பு வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகளுக்கு மாநாடு குறித்த முக்கிய அறிவிப்பு நாளை காலை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய அறிவிப்பு அடங்கிய அறிக்கையை தவெக தலைவர் விஜய் நாளை காலை 11 மணி அளவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அறிக்கையில் மாநாடு குறித்த முக்கிய தகதவல் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இம்மாதம் 23 ஆம் தேதி தவெக கட்சியின் மாநில மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடத்துவதற்கு சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மாநாடு நடக்க உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்பு வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.