என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இரட்டை இலை சின்னம் விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி அளித்த தேர்தல் ஆணையம்
- ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை
- இரட்டை இலை சின்னம் குறித்த எந்த வழக்கும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படவில்லை.
புதுடெல்லி:
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 3 நாட்களில் எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர். தேர்தல் ஆணையத்துக்கும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினருக்கும் பதிலளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவு பிறப்பித்தனர்.
அதன்படி தேர்தல் ஆணையம் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவில்லை, பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு உள்ளதால் ஏற்றுக்கொள்ளவில்லை, என கூறப்பட்டுள்ளது.
மேலும், இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது இடைத்தேர்தல் நடத்தும் அலுவலரின் முடிவுக்கு உட்பட்டது. இரட்டை இலை சின்னம் குறித்த எந்த வழக்கும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படவில்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார், என்றும் தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.






