என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை- மேலும் இருவர் கைது
    X

    கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை- மேலும் இருவர் கைது

    • மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது.
    • சிவராமன், எலி மருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பர்கூர் அடுத்த கந்திகுப்பம் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதே வழக்கில் தலைமறைவாக இருந்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சிவராமன் மீது மற்றொரு பள்ளி மாணவி பாலியன் வன்கொடுமை செய்ததாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளித்த புகாரில், கிருஷ்ணகிரியை சேர்ந்த கமல் என்பவர் கைதாகியுள்ளார்.

    இந்த விவகாரத்தின் முக்கிய குற்றவாளியாக சிவராமன், எலி மருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×