search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மருத்துவ துறையில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X

    மருத்துவ துறையில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    • 1021 மருத்துவர்கள், 983 மருந்தாளுனர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் அமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • பணியிடங்களை பொறுத்தவரை தேர்வு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார ஆய்வகத்தை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    மக்களை தேடி மருத்துவம் மூலம் தற்போது வரை ஒரு கோடியே 60 ஆயிரம் பேர் பயன் பெற்றிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள் உள்ளது. இதில் எம்.ஆர்.பி மூலம் 1021 மருத்துவர்கள், 983 மருந்தாளுனர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் அமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பணியிடங்களை பொறுத்தவரை தேர்வு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரமே பணியாணை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 14 மருத்துவர்கள் உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். அந்த மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று சுமூக முடிவு எடுக்கப்பட்டு விரைந்து மருத்துவ பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×