search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    anbumani ramadoss 10.% reservation
    X

    '10.5% இடஒதுக்கீட்டை தாண்டி பயன்பெறும் வன்னியர்கள்' - அரைகுறை தகவல்கள் என அன்புமணி அறிக்கை

    • ராமதாஸ் மற்றும் அன்புமணி வன்னிய சமுதாய மக்களை இனியும் ஏமாற்ற வேண்டாம்.
    • 10.5%ற்கும் மேல் வன்னியர் சமூகத்தினர் பயன்பெற்று வருவது தெரியவந்துள்ளது.

    வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில், கடந்த 2018 முதல் 2022 வரை இடஒதுக்கீட்டின் கீழ் 10.5%ற்கும் மேல் வன்னியர் சமூகத்தினர் பயன்பெற்று வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை கொண்டையன் கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல ஆணையத்திடமிருந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில தகவல்களைப் பெற்றுள்ளார்.

    இளங்கலை மருத்துவ இடங்கள்:

    2018 - 2022

    மொத்த இளங்கலை மருத்துவ இடங்கள் - 24,330

    மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் - 4,873

    வன்னியர் சமூக மாணவர்கள் - 2,781 (11.4%)

    வன்னியர் அல்லாத பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் - 1,414 (5.8 %)

    சீர்மரபினர் (DNC) - 678

    முதுகலை மருத்துவ இடங்கள்:

    2018 - 2022

    மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் - 1,363

    வன்னியர் சமூக மாணவர்கள் - 694 (10.2%)

    வன்னியர் அல்லாத பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் - 636 (9.1 %)

    சீர்மரபினர் (DNC) - 279 (4 %)

    உதவி காவல் ஆய்வாளர்கள் (sub-inspectors)

    2013 - 2022

    மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் - 1,919

    வன்னியர் சமூகத்தினர் - 327 (17 %)

    வன்னியர் அல்லாத பிற மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் - 126 (6.6%)

    சீர்மரபினர் (DNC) - 279 (7.9%)

    தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள்

    2013 - 2022

    மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் - 8,379

    இடஒதுக்கீட்டில் தேர்வான வன்னியர்கள் - 1,185 (10.9 %)

    மொத்த பணியிடங்களில் 17.1 சதவீதம் பேர் வன்னியர்கள் தேர்வாகியுள்ளனர்.

    2021ஆம் ஆண்டில் மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள்:

    மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் - 634

    இடஒதுக்கீட்டில் தேர்வான வன்னியர்கள் - 383

    மொத்த பணியிடங்களில் 17.5 சதவீதம் பேர் வன்னியர்கள் தேர்வாகியுள்ளனர்.

    டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 பணிகளுக்கு தேர்வானவர்கள்

    2012 - 2023

    மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் 11.2% வன்னியர்கள் தேர்வாகியுள்ளனர்.

    2013 - 2018

    மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் 13.6 % வன்னியர்கள் தேர்வாகியுள்ளனர்.

    டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பணிகளுக்கு தேர்வானவர்கள்

    2013 - 2022

    மொத பணியிடங்களில் 19.5% வன்னியர்கள் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

    நீதிபதிகள்

    2013 - 2022

    மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் - 79

    இடஒதுக்கீட்டில் தேர்வான வன்னியர்கள் - 39 (9.9%)

    இந்த தகவல்களை தருமபுரி முன்னாள் எம்.பி. செந்தில் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், 10.5 % வன்னியர்களுகான இட ஒதுக்கீடு அவர்களின் படிப்பு வேலை வாய்ப்புகளில் இப்பொழுது கிடைக்கும் வாய்ப்புகளை விட குறைவு என்று தொடர்ந்து நான் கூறிவந்த நிலையில் இன்று தரவுகள் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணி வன்னிய சமுதாய மக்களை இனியும் ஏமாற்ற வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த விவகாரம், தமிழகத்தில் பேசுபொருளான நிலையில், இதுதொடர்பாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் பெற்று விட்டதாக திரிக்கப்பட்ட, அரைகுறை விவரங்களுடன் கூடிய புள்ளிவிவரங்களை தகவல் பெறும் உரிமை சட்டப்படி பதில்களாக வெளியிட்டுள்ள தமிழக அரசு, இப்போது அடுத்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

    தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களை தொகுத்துள்ள தமிழக அரசு, அதை தமிழக அரசின் செய்திக்குறிப்பு என்ற குறிப்பு இல்லாமல் அனாமதேய செய்தி போன்று பிரைவேட் நியூஸ் என்ற பெயரில் அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி செய்தி வெளியிடும்படி கட்டாயப்படுத்துவதாக ஊடக நண்பர்கள் சிலரே என்னிடம் குறைபட்டுக் கொண்டனர்.

    திமுக அரசு மேற்கொண்டு வரும் வன்னியர் சமூகநீதி படுகொலையில் ஊடகங்களையும் கூட்டாளிகளாக்கக் கூடாது; அந்த பாவத்தில் பத்திரிகையாளர்களையும் பங்கேற்கச் செய்யக் கூடாது. இது போன்ற மோசடிகளை அரங்கேற்றுவதன் மூலம் வன்னியர்களுக்கு கூடுதலாக பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு முயன்றால் அதற்கு கிடைக்கப் போவது படுதோல்வி தான்.

    தமிழக அரசுக்கு உண்மையாகவே சமூகநீதியில் அக்கறை இருந்தால், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் அனைத்து சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முன்வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×