என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு
- கடந்த 24 மணி நேரத்தில் பூண்டி-9 செ.மீ., சோழவரம்-4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
- புழல் ஏரிக்கான நீர்வரத்து 281 கனஅடியில் இருந்து 663 கனஅடியாக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர் இருப்பை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் பூண்டி-9 செ.மீ., சோழவரம்-4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
புழல் ஏரிக்கான நீர்வரத்து 281 கனஅடியில் இருந்து 663 கனஅடியாக உயர்ந்துள்ளது. சோழவரம் ஏரிக்கான நீர்வரத்து 174 கனஅடியில் இருந்து 231 கனஅடியாக அதிகரித்துள்ளது.