search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உலக தலைவர்கள் எதிர்பார்ப்பு: இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? - கே.பி முனுசாமி
    X

    உலக தலைவர்கள் எதிர்பார்ப்பு: இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? - கே.பி முனுசாமி

    • இந்தியா இன்று பல்வேறு வகைகளில் உலகளவில் முன்னேறி வருகிறது.
    • உண்மையான மக்கள் செல்வாக்கு உள்ள இயக்கம் எது?

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வருகிற 11-ந் தேதி , அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், மாற்று கட்சியினர் அ.தி.மு.க வில் இணையும் விழா நடைபெறுகிறது.

    இதில் கலந்து கொள்ள வரும் எடப்பாடி பழனிசாமிக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.

    இதில், கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசியதாவது:-

    இந்திய திருநாட்டின் பாராளுமன்ற தேர்தலை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏனென்று சொன்னால் இந்தியா இன்று பல்வேறு வகைகளில் உலகளவில் முன்னேறி வருகிறது. இந்த சூழலில் இந்தியாவில் அடுத்த பிரதமர் யார் வரவுள்ளார் ? என உலக தலைவர்கள் எல்லோரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், தமிழகத்தை பொறுத்த வரையில் யார் உண்மையான மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர், உண்மையான மக்கள் செல்வாக்கு உள்ள இயக்கம் எது ? என்பதை தெளிவுபடுத்துகிற தேர்தலாக, இந்த தேர்தல் உள்ளது.

    சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, நாம் எதிர்நோக்குகின்ற பாராளுமன்ற பொது தேர்தல், இந்த பொதுத் தேர்தலில் இந்திய அளவில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒரு பக்கம் நிற்கிறது. அதுபோல தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் ஒரு கூட்டணி ஒரு பக்கமும், இந்த இரண்டு கூட்டணிகளையும் தவிர்த்து தமிழகத்தின் நலனில் அக்கறை உள்ள தலைவர்களை பிரதமராக தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பினை தாருங்கள், என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலை மையில் நாம் ஒரு மெகா கூட்டணி அமைத்து மக்களை சந்திக்க உள்ளோம், இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார்.

    Next Story
    ×