search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவண்ணாமலையில் டாஸ்மாக் மதுபாட்டிலில் புழு- நடவடிக்கை எடுக்க கோரிக்கை
    X

    மதுபாட்டிலில் புழு

    திருவண்ணாமலையில் டாஸ்மாக் மதுபாட்டிலில் புழு- நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    • டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர் ஒருவர் குவாட்டர் பாட்டில் மதுபானம் வாங்கி உள்ளார்.
    • திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு பல லட்ச ரூபாய் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டு வருகின்றது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் மூலம் ஒரு நாளிற்கு ஆயிரக்கணக்கில் பல்வேறு வகை மதுபானங்கள் மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர் ஒருவர் குவாட்டர் பாட்டில் மதுபானம் வாங்கி உள்ளார். இதில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் அந்த டாஸ்மாக் கடையில் நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனால் அந்த கடையில் 1 மணி நேரத்திற்கு மேல் மதுவிற்பனை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மதுபாட்டில்களை வாங்க வந்த மது பிரியர்கள் மது பாட்டில்களை வாங்க முடியாமல் திரும்பி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவியது.

    இதுகுறித்து திருவண்ணாமலை டாஸ்மாக் உயர் அதிகாரிக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு பல லட்ச ரூபாய் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டு வருகின்றது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×