search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக மீனவர்கள் 12 பேர் கைது- இலங்கை கடற்படை அட்டூழியம்
    X

    தமிழக மீனவர்கள் 12 பேர் கைது- இலங்கை கடற்படை அட்டூழியம்

    • கைது செய்யப்பட்டவர்களை இலங்கையின் காங்கேசன் துறை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை டாடாநகரை சேர்ந்தவர் செல்வநாதன் (வயது 40). இவர் சொந்தமாக விசை படகு வைத்துள்ளார்.

    அந்த விசை படகில் படகின் உரிமையாளர் செல்வநாதன், அதே பகுதியை சேர்ந்த விஜயநாதன், குழந்தைவேல், பாக்கியராஜ் மற்றும் ஆனந்தவேல், மாதவன், இனியவன், சதன், சரவணன், சுப்பிரமணியன், செந்தில், ஆறுமுகம் உள்ளிட்ட 12 பேர் கடந்த 10-ந்தேதி அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நேற்று நள்ளிரவு கோடியகரைக்கு தென்கிழக்கே 40 கடல் மைல் தொலைவில் முல்லைத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி நாகை மீனவர்கள் 12 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கைது செய்யபட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு மீனவர்களை படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்து வருவதாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 10-ந்தேதி எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில் இன்று 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். இது தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×