search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆவடி பகுதியில் கால்பந்து கோல்போஸ்ட் விழுந்து சிறுவன் உயிரிழப்பு
    X

    ஆவடி பகுதியில் கால்பந்து கோல்போஸ்ட் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

    • கோல் போஸ்ட் தலையில் விழுந்ததில் ஆத்ரிக் (7) என்ற சிறுவன் மயக்கம் அடைந்துள்ளான்.
    • சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆவடி விமானப் படை ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள மைதானத்தில் கால்பந்து கோல்போஸ்ட் தலையில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கால்பந்தாட்டத்தில் கோல் கீப்பராக விளையாடியபோது கோல் போஸ்ட் தலையில் விழுந்ததில் ஆத்ரிக் (7) என்ற சிறுவன் மயக்கம் அடைந்துள்ளான். இதையடுத்து நண்பர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிறுவனை பரிசோதித்த டாக்டர் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×