என் மலர்
தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டி இல்லை
- கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா ? புறக்கணிப்பா ? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் புறக்கணிப்பு.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா ? புறக்கணிப்பா ? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில், "நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் கையை விரித்து விட்டார். மத்திய அரசு தான் நீட் தேர்வை ரத்து செய்யமுடியும் என்று முதலமைச்சர் தற்போது கூறுகிறார். நீட் தேர்வு ரத்து என்று கூறி மாணவர்கள், பெற்றோர்களை திமுக அரசு ஏமாற்றி விட்டது" என்றார்.
மேலும், தந்தை பெரியாருக்கு எதிராக பேசிய சீமானுக்கு கண்டனம் தெரிவித்தார். திமுக ஆட்சி மீடு குற்றச்சாட்டுகளை இபிஎஸ் அடுக்கினார்.
இந்நிலையில், ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை என தெரிவித்துள்ளது.
அதன்படி, வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
" ஏற்கனவே நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது.
பணம், மது, தங்கக்காசு, சொலுசு, குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
அராஜகங்கள், வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள்.
மேலும், சட்டம்றற- ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ள, நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், 5.2.2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை கழகம் புறக்கணிக்கிறது ! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு.… pic.twitter.com/cOJeguuqkK
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) January 11, 2025