என் மலர்
தமிழ்நாடு

அன்புமணி கூறுவது தவறு- போக்குவரத்துக் கழகம் விளக்கம்

- ஆங்கிலத்தில் மாற்றுவது தமிழுக்கு இழைக்கும் துரோகம் என அன்புமணி கூறியிருந்த நிலையில் விளக்கம்.
- ஜப்பான் நிறுவன உதவியுடன் டிப்போ மேலாண்மை அமைப்பு மூலம் குறிப்பீடு ஆங்கிலத்தில் உருவாக்கப்படுகிறது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகங்களின் மூலம் இயக்கப்படும் மாநகரப் பஸ்களின் செயல்பாடுகள் குறித்த குறிப்புகளை பதிவு செய்வதற்கான வண்டி குறிப்பேடு இதுவரை தமிழில் வழங்கப்பட்டு வந்ததாகவும், ஆனால், அதை இப்போது ஆங்கிலத்தில் மாற்றியுள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இதற்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.
அப்போது, மாநகர் போக்குவரத்து கழகத்தில் பேருந்து குறிப்பேடு தாள்கள் ஆங்கிலத்தில் மாற்றப்பட்டதாக கூறப்படும் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் மாற்றுவது தமிழுக்கு இழைக்கும் துரோகம் என அன்புமணி கூறியிருந்த நிலையில் மாநகர போக்குவரத்துக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், ஜப்பான் நிறுவன உதவியுடன் டிப்போ மேலாண்மை அமைப்பு மூலம் குறிப்பீடு ஆங்கிலத்தில் உருவாக்கப்படுகிறது என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மென்பொருள் உருவாக்கப்பட்டபோது குறிப்பேடு தாள்கள் ஆங்கிலத்தில் தான் இருந்தது என்றும் தற்போது தமிழில் மாற்றப்பட்டுள்ளது என்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.
மறுப்பு செய்தி"மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து குறிப்பேடு தாள்களை ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டது" என்ற செய்தி தவறானது.- மாநகர் போக்குவரத்துக் கழகம்.#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus | @dinamalarweb pic.twitter.com/8193cB9kEM
— MTC Chennai (@MtcChennai) February 27, 2025