என் மலர்
தமிழ்நாடு
அண்ணா பல்கலை மாணவி வழக்கு - சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரனுக்கு வலிப்பு
- ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி.
- தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவனை கோட்டூர்புரம் போலீசார் கடந்த 25-ந்தேதி கைது செய்தனர்.
இதையடுத்து போலீசாரிடம் இருந்து ஞானசேகரன் தப்ப முயன்ற போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஞானசேகரன் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
பிறகு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரனுக்கு இன்று அதிகாலை வலிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, ஞானசேகரன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஞானசேகரனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.