என் மலர்
தமிழ்நாடு

தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கை தான், அதில் எந்த மாற்றமும் கிடையாது- எடப்பாடி பழனிசாமி

- மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறுவது சரியல்ல.
- திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது.
வேலூர் மாவட்டம், கோட்டை மைதானத்தில் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மண்டல மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர் பேசியதாவது:-
2026 சட்டமன்ற தேர்தலில் 200 அல்ல 234 தொகுதிகளிலும் அதிமுக வாகைசூடும். தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கை தான், அதில் எந்த மாற்றமும் கிடையாது.
மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என் சாக்கு போக்கு சொல்லி மக்களை ஏமாற்றாதீர்கள். மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறுவது சரியல்ல.
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 15 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்திருக்கிறது.
குழந்தைகள் அப்பா என்று கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பாலியல் துன்புறுத்தலின்போது குழந்தைகள், பெண்கள் அப்பா அப்பா என்று கதறுவது கேட்கவில்லையா ?
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தமிழ்நாட்டில் 5 லட்சம் அரசு ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. எப்போது நிரப்ப போகிறது திமுக.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு போராட்டம் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.