என் மலர்
தமிழ்நாடு
X
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: 19 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம்
Byமாலை மலர்14 Jan 2025 6:27 PM IST
- 11 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.
- 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக்கு நிஸான் கார் பரிசாக வழங்கப்பட்டது.
தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
11 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முடிவில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்தி 19 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்துள்ளார்.
குன்னத்தூரை சேர்ந்த அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி 2 ஆம் இடம் பிடித்துள்ளார். திருப்புவனம் முரளிதரன் 13 காளைகளை அடக்கி 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.
19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக்கு நிஸான் கார் பரிசாக வழங்கப்பட்டது. 15 காளைகளை அடக்கி 2 ஆம் பிடித்து அரவிந்த் திவாகருக்கு ஹோண்டா ஷைன் பைக் பரிசாக வழங்கப்பட்டது.
Next Story
×
X