search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையை சேர்ந்த பாடகியை திருமணம் செய்யும் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னையை சேர்ந்த பாடகியை திருமணம் செய்யும் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா?

    • சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் என்பவரை தேஜஸ்வி சூர்யா திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • மார்ச் 4 ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவிற்கு 34 வயதாகியும் இன்னமும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

    இந்நிலையில், தேஜஸ்வி சூர்யாவும் சென்னையை சேர்ந்த பாடகியும் பரதநாட்டிய கலைஞருமான சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் மார்ச் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

    இருப்பினும், தேஜஸ்வி சூர்யா இது தொடர்பான அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ள சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் சென்னை சமஸ்கிருத கல்லுாரியில் சமஸ்கிருதத்தில் எம்.ஏ. பட்டமும் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பயோ இன்ஜினியரிங் படிப்பில் பி.டெக். பட்டமும் முடித்துள்ளார்.

    பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் கன்னட மொழி பதிப்பில் இவர் ஒரு பாடலும் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், சிவஸ்ரீ சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரது சேனலை, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×