என் மலர்
தமிழ்நாடு
தமிழகம் வரும் அமித் ஷாவிற்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை
- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 27-ந்தேதி தமிழகம் வர இருக்கிறார்.
- எனது தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடைபெறும் எனத் தகவல்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியில் கலந்து கொள்ள மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 27-ந்தேதி தமிழகம் வரும் அமித் ஷா, சென்னையில் இருந்து 28-ந்தேதி திருவண்ணாமலை சென்று அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் "வரும் 27-ம் தேதி தமிழ்நாடு வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக எனது தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடைபெறும்.
ஜனநாயகத்தின் மீதும், இந்திய அரசியல் அமைப்பின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் ஒன்று கூடுவோம்" என சமூக வலைத்தளத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திருவண்ணாமலை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பா.ஜ.க. அலுவலகம் கட்டடங்கள் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. திறந்து வைக்க அமித் ஷாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். வருகை குறித்த தேதி முடிவு செய்தபின் அறிவிப்போம் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.