என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![பாட்டிலில் தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த குழந்தை உயிரிழப்பு பாட்டிலில் தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த குழந்தை உயிரிழப்பு](https://media.maalaimalar.com/h-upload/2025/02/06/9012569-baby1.webp)
X
பாட்டிலில் தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த குழந்தை உயிரிழப்பு
By
மாலை மலர்6 Feb 2025 9:04 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வீட்டில் அடுப்பு பற்றவைக்க பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த டீசலை தண்ணீர் என நினைத்து குழந்தை மைதிலி குடித்தது.
- குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் குறிஞ்சிப்பாடி அருகே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் வடலூர் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில், தண்ணீர் என நினைத்து பாட்டிலில் இருந்த டீசலைக் குடித்த ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடலூர் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியை சேரந்த சூர்யா- சினேகா தம்பதியின் 1.5 வயது குழந்தை மைதிலி.
வீட்டில் அடுப்பு பற்றவைக்க பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த டீசலை தண்ணீர் என நினைத்து குழந்தை மைதிலி குடித்தது.
குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் குறிஞ்சிப்பாடி அருகே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
Next Story
×
X