search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதில்லை- முதல்வர் மு.க.ஸ்டாலின்
    X

    எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதில்லை- முதல்வர் மு.க.ஸ்டாலின்

    • கொளத்தூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அதிகளவு மழை பெய்த விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு மூத்த அதிகாரிகள், உயரதிகாரிகள் விரைந்துள்ளனர்.

    ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.

    செல்விநகர் நீர் உந்து நிலையத்தில் ஆய்வு நடத்திய முதலமைச்சர், அப்பகுதி மக்களிடம் மழைநீர் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகளின் இருப்பு குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    கொளத்தூர் சீனிவாச நகர் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களின் வருகைப்பதிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

    இதையடுத்து கொளத்தூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து அவர் கேட்டறிந்தார்.

    இந்நிலையில் கொளத்தூரில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதுமில்லை; கவலைப்படுவதும் இல்லை.

    * அதிகளவு மழை பெய்த விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு மூத்த அதிகாரிகள், உயரதிகாரிகள் விரைந்துள்ளனர்.

    * மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதியை அனுப்பி உள்ளேன்.

    * தலைநகரம் நிம்மதியாக இருக்கிறது.

    * வானிலையை ஓரளவுக்குத்தான் கணிக்க முடியும். புயலின் வேகம் குறைந்து ஒரே இடத்தில் நிற்பதை எப்படி கணிப்பது? திடீரென மாறி விடுகிறது.

    * வானிலை மையம் கொடுக்கும் தகவல் அடிப்படையில்தான் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.

    Next Story
    ×