என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அம்பேத்கரை போற்றியவர் கலைஞர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- இந்தியாவிலேயே முதன்முதலாக அம்பேத்கர் பெயரில் அரசு கல்லூரியை கொண்டு வந்தது திமுக.
- சென்னை பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டியவர் கலைஞர்.
சென்னை எழும்பூரில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அண்ணல் அம்பேத்கரை வணங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
* அண்ணல் அம்பேத்கருக்கு சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது என்று சொன்னார் தந்தை பெரியார்.
* இந்தியாவிலேயே முதன்முதலாக அம்பேத்கர் பெயரில் அரசு கல்லூரியை கொண்டு வந்தது திமுக.
* சென்னை சட்ட பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டியவர் கலைஞர்.
* சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்கு பாடுபடும் அரசு திமுக அரசு.
* சென்னை பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டியவர் கலைஞர்.
* அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாட உத்தரவிட்டது திமுக அரசு.
* நாட்டிலேயே முதன்முதலாக அண்ணல் அம்பேத்கர் பெயரில் அரசு கல்லூரியை கொண்டு வந்தது திமுக.
* கடந்த 3 ஆண்டில் பட்டியலின மக்களுக்கு அதிக திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம்.
* ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதார உயர் நிலையை அடைய அம்பேத்கர் தொழில்முனைவோர் திட்டம் கொண்டுவரப்பட்டது.
* பழங்குடியின கிராமங்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.250 கோடியில் திட்டம்.
* பழங்குடியினர் மகளிர் மேம்பாட்டிற்காக அனைத்து கிராமங்களிலும் மகளிர் சுய உதவி குழுக்கள்.
* திருமாவளவனின் கோரிக்கையை ஏற்று அம்பேத்கரின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டது.
* அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவரும் என்று கூறினார்.






