search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல் - சென்னையில் விமான சேவை மீண்டும் தொடக்கம்
    X

    கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல் - சென்னையில் விமான சேவை மீண்டும் தொடக்கம்

    • மோசமான வானிலை காரணமாக விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக நிர்வாகம் அறிவித்திருந்தது.
    • நள்ளிரவிலேயே புயல் கரையை கடந்து மழை குறைந்தது

    சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்துள்ளது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது.

    இதற்கிடையே நேற்று காலை முதல் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது சென்னை விமான நிலைய ஓடு தளத்திலும் தண்ணீர் தேங்கி நின்றது. மோசமான வானிலை காரணமாக விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்திருந்தது.

    அடுத்து இன்று [நவம்பர் 1] அதிகாலை 4 மணிக்கு மீண்டும் சேவைகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நள்ளிரவிலேயே புயல் கரையை கடந்து மழை குறைந்ததால் விமான சேவை அறிவிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் மூன்று மணி நேரம் முன்னதாக நள்ளிரவு 1 மணிக்கே தொடங்கியுள்ளது. சுமார் 13 மணி நேரங்கள் கழித்து விமான சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.

    Next Story
    ×