search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்சியில் சாரணர் இயக்க வைர விழா: ஏற்பாடுகள் தீவிரம்
    X

    திருச்சியில் சாரணர் இயக்க வைர விழா: ஏற்பாடுகள் தீவிரம்

    • விழா 7 நாட்கள் நடைபெறுகிறது.
    • 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள்.

    திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் வருகின்ற 28- ந்தேதி முதல் பிப்-3 ந்தேதி வரை பாரத சாரண, சாரணியர் இயக்க வைரவிழா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

    சாரணர் இயக்கத்தின் தேசிய அளவிலான வைர விழாவிற்கு தமிழக அரசு ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த விழா 7 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இதற்காக பெருந்திரளணி சபை, திட்டக்குழு, தொழில்நுட்பக்குழு,செயல்பாட்டுக்குழு மற்றும் 33 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இயக்குநர்களும் குழு ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாரணர் இயக்க வைர விழா நடைபெறும் திருச்சி சிப்காட் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பாரத சாரணர் இயக்கத்தின் வைர விழாவை சிறப்பாக கொண்டாடுவதன் மூலம் தமிழகத்தின் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்ட ஒரு நல்ல வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.

    * முதற்கட்டமாக 38 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

    * ஜனவரி 22-ந் தேதி, குடியரசுத் தலைவரை எங்கள் குழுவினர் சந்திக்க உள்ளனர். அதன்பிறகு அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா இல்லையா என்பது குறித்து தெரியவரும். விழா சிறப்பாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

    * இதற்கு முன்னதாக கர்நாடகாவில் சர்வதேச அளவிலும், ராஜஸ்தானில் தேசிய அளவிலும் பாரத சாரணர் இயக்குநரக நிகழ்வை நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் அதைவிட பிரம்மாண்டமாக நடத்த உள்ளோம்.

    * தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாட்டினர் கலந்துகொண்டு தங்கள் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு போன்ற பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி காட்ட உள்ளனர்.

    * சாரணர்கள் தங்குவதற்காக 1000 கூடாரங்கள் மற்றும் சாரணியர்கள் தங்குவதற்காக 900 கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன.

    திரிசாரண சாரணியர்கள் தங்குவதற்காக 550 கூடாரங்கள், ஒன்றிய மற்றும் அரசு அலுவலர்கள் தங்குவதற்காக 40 கூடாரங்கள், அலுவலக பணிக்கா 32 கூராடங்கள் என மொத்தம் 2,422-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளியறைகள், கழிவறைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



    Next Story
    ×