search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கொலைகாரப் பாவிகள் என விமர்சித்த திண்டுக்கல் சீனிவாசன்
    X

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை 'கொலைகாரப் பாவிகள்' என விமர்சித்த திண்டுக்கல் சீனிவாசன்

    • கடந்த தேர்தலில் நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியப் பெருமக்களும் தான்.
    • தாய்மார்கள் பிரசவத்தின்போது குழந்தையை பார்த்து மகிழ்ச்சி அடைவது போல மகிழ்ச்சி அடைந்தேன்.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:

    கடந்த தேர்தலில் நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியப் பெருமக்களும் தான்.

    நான் எம்.எல்.ஏ.வாக திண்டுக்கலில் 22 ஆயிரம் ஓட்டில் வெற்றி பெற்று, கையெழுத்து போடப்போகும்போது துணை தாசில்தார் ஓடி வந்தார்.

    தபால் ஓட்டு எண்ணுகிறோம். கொஞ்ச நேரம் இருங்கள். கையெழுத்து போடாதீர்கள் என்று கூறினார்.

    சரி வரட்டும். 1000, 2000 ஓட்டுகள் அதிகமாக கிடைக்கும் என்று உட்கார்ந்து இருந்தேன். 5000 ஓட்டு உங்களுக்கு குறைந்து போய் விட்டது என்றார்கள்.

    தபால் ஓட்டுகள் திமுகவிற்கு போய் விட்டது. 5000 குறைத்து 17,500 ஓட்டில் நீங்கள் ஜெயித்தீர்கள் என்று கூறினார்கள்.

    அதையாவது எனக்கு கொடுங்க... நான் ஜெயித்து விட்டேன்ல. அதுபோதும் என்றேன்.

    தாய்மார்கள் பிரசவத்தின்போது குழந்தையை பார்த்து மகிழ்ச்சி அடைவது போல மகிழ்ச்சி அடைந்தேன்.

    என் தொகுதியில் 1 தபால் ஓட்டு கூட எங்களுக்கு வரவில்லை. எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் பாருங்கள். அடக்கொலைகாரப் பாவிகளா...

    தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் குடும்பத்தினர் ஓட்டு 80 லட்சம் ஓட்டு. விளையாட்டு கிடையாது தோழர்களே என்று அவர் பேசினார்.

    Next Story
    ×