என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![தீபாவளி: பேக்கரிகளில் தரமான உணவுப் பொருட்கள்- அதிகாரிகள் உத்தரவு தீபாவளி: பேக்கரிகளில் தரமான உணவுப் பொருட்கள்- அதிகாரிகள் உத்தரவு](https://media.maalaimalar.com/h-upload/2024/10/25/5642706-sweets.webp)
தீபாவளி: பேக்கரிகளில் தரமான உணவுப் பொருட்கள்- அதிகாரிகள் உத்தரவு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- உணவுப் பொருட்களில் காலாவதி தேதி, தயாரிப்பு இடம் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்க வேண்டும்.
- உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பேக்கரிகளில் இனிப்பு, பலகாரங்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி பேக்கரிகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் காலாவதி தேதி, தயாரிப்பு இடம் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிப்புறங்களில் வைத்து தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் உணவு பாதுகாப்புத் துறையில் முறையாக லைசன்ஸ் பெற்று தயாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத்துறை வழங்கியுள்ள அறிவுறுத்தல்படி உணவுப் பொருட்கள் தயாரிக்க வேண்டும் என்றும் மீறினால் உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.