என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

என்ன சரக்கா இருக்கும்.. மதுபோதையில் சாலை டிவைடரின் மேல் அமர்ந்து யோகா செய்த நபர்
- அரை நிர்வாண கோலத்தில் போதை ஆசாமி சாலையின் டிவைடரின் மேல் யோகாசனம் செய்துள்ளார்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் காட்டாஸ்பத்திரி பகுதியில் சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் அமர்ந்து மதுபோதையில் யோகாசனம் செய்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ட்ரவுசர் மட்டும் அணிந்து அரை நிர்வாண கோலத்தில் போதை ஆசாமி சாலையின் நடுவே உள்ள டிவைடரில் ஏறி அமர்ந்து யோகாசனம் செய்துள்ளார்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
Next Story






