என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கிங்ஸ்டன் கல்லூரியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
- அமைச்சர் துரைமுருகன் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
- தி.மு.க. விவசாய அணி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான அமைச்சர் துரைமுருகன் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள வேலூர் மாநகர தி.மு.க. விவசாய அணி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும், அவரது உறவினர் வீட்டிலும், கதிர் ஆனந்துக்கு சொந்தமான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நேற்று காலை 8 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
Next Story






