என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![சிலுவம்பாளையம் காவிரி கரை முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் சிலுவம்பாளையம் காவிரி கரை முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/11/9189085-edappadi.webp)
சிலுவம்பாளையம் காவிரி கரை முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- முருகப்பெருமான் கோவில்களில் தைப்பூச விழா விமர்சையாக நடைபெற்றது.
எடப்பாடி:
சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று தைப்பூச திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகன் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. இதில் எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காவடி பூஜை, கந்தர் அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. சிறப்பு பூஜையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் எடப்பாடி அடுத்த வெண்குன்றம் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில், எடப்பாடி அருள் ஞான பாலமுருகன் சன்னதி, க.புதூர் கந்தசாமி ஆலயம், கவுண்டம்பட்டி குமர வடிவேலர் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகப்பெருமான் கோவில்களில் தைப்பூச விழா விமர்சையாக நடைபெற்றது.