search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பட்டாசு ஆலை வெடி விபத்து- 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பட்டாசு ஆலை வெடி விபத்து- 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

    • வெடி விபத்தில் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    • ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டியில் சாய்நாத் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது பட்டாசு ஆலையில் வெடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இன்று காலை பட்டாசு ஆலையில் உள்ள ஒரு அறையில் மருந்து கலக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன், நாகராஜ், கண்ணன், சிவக்குமார், காமராஜ், மீனாட்சிசுந்தரம் ஆகிய 6 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இடிபாடுகளில் சிதறி கிடந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பின்றி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×