என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![இபிஎஸ் விழாவை புறக்கணித்தது ஏன்? - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் இபிஎஸ் விழாவை புறக்கணித்தது ஏன்? - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/10/9144551-edappadi.webp)
இபிஎஸ் விழாவை புறக்கணித்தது ஏன்? - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நிதி வழங்கியவர் ஜெயலலிதா.
- 2011-ல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி அளித்தார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக கோவை அன்னூர் அருகே முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஆனால் இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி- செங்கோட்டையன் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அத்திக்கடவு- அவினாசி திட்டத்தில் விழாவை ஏற்பாடு செய்த குழுவினர் 3 நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தனர். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நிதி வழங்கியவர் ஜெயலலிதா. 2011-ல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி அளித்தார். திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவை நான் புறக்கணிக்கவில்லை. விழாவிற்கு செல்லவில்லை என்று கூறினார்.