search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறுமி உயிரிழப்பு விவகாரம்- ஆசிரியை தொடர்ந்து பள்ளி முதல்வர், தாளாளருக்கும் நீதிமன்ற காவல்
    X

    சிறுமி உயிரிழப்பு விவகாரம்- ஆசிரியை தொடர்ந்து பள்ளி முதல்வர், தாளாளருக்கும் நீதிமன்ற காவல்

    • பள்ளியின் முதல்வர், தாளாளர், ஆசிரியை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    • தாளாளர், முதல்வரிடம் நீதிபதி நேரில் விசாரணை நடத்திய நிலையில் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.

    இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து, நேற்று மாலை பள்ளியின் முதல்வர், தாளாளர், ஆசிரியை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த விவகாரத்தில், வகுப்பு ஆசிரியை ஏற்கனவே நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், செயின்ட் மேரீஸ் பள்ளி தாளாளர், முதல்வருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட தாளாளர், முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதனால், தாளாளர், முதல்வரிடம் நீதிபதி நேரில் விசாரணை நடத்திய நிலையில் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, செயின்ட் மேரீஸ் பள்ளி முதல்வர், தாளாருக்கு வரும் 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×