என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழ்நாட்டை பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்- நடிகர் சத்யராஜ்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கினார்.
- தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதாரண குடிமகனான எனக்கு மகிழ்ச்சியான விஷயம்.
முத்தமிழ் பேரவையின் பொன்விழா ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கினார்.
விருது பெற்ற நடிகர் சத்யராஜ் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 3 ஆண்டுகளாக திமுக ஆட்சி மிக மிக சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதற்கு மிகப்பெரிய உதாரணம், கோவைக்கு முதலமைச்சர் வந்திருந்தபோது இதுவரை எந்த தலைவருக்கும் கிடைக்காத வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது.
ஓய்வறியா சூரியன் என்று டாக்டர் கலைஞரை கூறுவார்கள். அதேபோல், ஸ்டாலின் அவர்களும் கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு சுற்றுபவர். ஓயாமல் உழைப்புக்கு சொந்தக்காரர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அவர்களின் தலைமையில் தினந்தினம் திட்டங்களை யோசித்து அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்து தமிழ்நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்று அனைவரும் ஆராய்ந்து தொடர்ந்து நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
அதுதான் தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதாரண குடிமகனான எனக்கு மகிழ்ச்சியான விஷயம்.
நான் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடிக்கிறேன். ஒவ்வொறு ஊருக்கும் சென்றுவிட்டு வரும்போது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து தெரிகிறது.
அதிகபட்சமாக, அந்த மாநிலங்களின் தலைநகர் மட்டும் ஓகோ என்று இருக்கும். ஆனால், தலைநகரைவிட்டு பிற இடங்களுக்கு செல்லும்போதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்னவென்று புரியும்.
தமிழ்நாட்டை பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும். ஏன் என்றால், இந்தியாவில் இருக்கின்ற பல மாநிலங்களில் இருந்து ஏன் வேலை தேடி வருகிறார்கள் என்றால், இரண்டு விஷயம்.
தமிழ்நாட்டின் வாழ்க்கைதரம் உயர்ந்துவிட்டது. அவர்களின் வாழ்க்கை தரம் குறைவாக இருக்கிறது. நம் மக்கள் நன்றாக படித்து எங்கேயோ சென்றுவிட்டனர்.
1967க்கு பிறகு, திராவிட கருத்தியல் கூடிய ஆட்சியில் தமிழ்நாடு சிறப்பாக நடத்த ஏய்திவிட்டது. அதனால்தான், தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர். அவர்களுக்கு திராவிட கருத்தியலை போதிக்கவேண்டும்.
தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளாலும், பேரறிஞர் அண்ணாவின் சிந்தனைகளாலும், கலைஞரின் சிந்தனைகளாலும், செயல் திட்டங்களாலும்தான் தமிழ்நாட்டு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று வட மாநில தொழிலாளர்கள் அவர்களின் மாநிலத்தில் சொல்ல வேண்டும்.
சிறப்பான முதல்வர் கையில் இருந்து கலைஞர் விருது பெற்றதில் பெருமைக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்