என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை வலுப்படுத்த அ.தி.மு.க. துணை போவது வரலாற்றுப் பிழை- திருமாவளவன்
    X

    பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை வலுப்படுத்த அ.தி.மு.க. துணை போவது வரலாற்றுப் பிழை- திருமாவளவன்

    • பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து அ.தி.மு.க. மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் திருமாவளவன்.
    • சமூக நீதி அரசியலை நீர்த்துச்செய்ய போக வேண்டும் என்பதில்தான் குறிக்கோளாக இருக்கிறார்கள்.

    பாஜகவின் வாக்கு வங்கி ரீதியில் வலுப்படுத்த அதிமுக துணை போவது வரலாற்றுப் பிழை.. இதனை அவர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற சங் பரிவாளர் அமைப்புகள் ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் இங்கே ஒரு அரசியல் கட்சியாக வலிமைப் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அவர்கள் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும என்பதை விட, தமிழகத்தில் நிலைக்கொண்டு இருக்கிற பெரியார் அரசியலை அல்லது சமூக நீதி அரசியலை நீர்த்துச்செய்ய போக வேண்டும் என்பதில்தான் குறிக்கோளாக இருக்கிறார்கள்.

    இன்னும குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், திராவிடக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றை பலவீனப்படுத்தி அவர்கள் இங்கே காலூன்றி நிற்க வேண்டும். பின்னால், அடுத்த திராவிடக் கட்சியையும் அழித்தொழிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.

    திமுக, அதிமுக என்கிற இரண்டு அரசியல் கட்சிகளை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இங்கு நிலைக்கொண்டிருக்கிற சமூக நீதி அரசியலை வலுவிழக்கச் செய்ய வேண்டும். அது தான் பாஜகவின் உண்மையான நோக்கம். உள்நோக்கம்.

    ஆனால், இவற்றை எல்லாம் அறிந்தும் கூட அதிமுக ஒரு வரலாற்றுப் பிழையை செய்துள்ளது. 2021ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையிலும் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பது என்பது அதிமுகவிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தும் இப்படி முடிவு எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    அதிமுகவிற்கு ஏற்படுகிற பின்னடைவுகளை எல்லாம் தாண்டி, பாஜகவை வாக்கு வங்கி ரீதியாக வலிமைப் படுத்துவதற்கு துணைப் போகிறது என்பது வரலாற்றுப் பிழை. அதிமுக மீண்டும் சிந்தித்த மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது வரலாற்று தேவையாக இருக்கிறது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

    மேலும், முதலமைச்சரின் கருத்தை முழுமையாக ஏற்று ஆதரிக்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×