search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மெட்ரோ நிறுவனத்தில் பெண் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னை மெட்ரோ நிறுவனத்தில் பெண் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு

    • பெண் பொறியாளர்களுக்கான 8 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியீடு.
    • 30 வயதை தாண்டாத குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் உள்ள பெண் பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

    பெண் பொறியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ளது.

    அதன்படி, பெண் பொறியாளர்களுக்கான 8 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    30 வயதை தாண்டாத குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் உள்ள பெண் பொறியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அதற்கு மாத சம்பளம் ரூ.62 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    விரிவான வேலைவாய்ப்பு அறிவிப்பு chennaimetrorail.org என்ற இணைய முகவரியில் வரும்10ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டிய கடைசி தேதி பிப்ரவரி 10 எனவும் தகுதியடைந்த விண்ணப்பதாரர்களுக்கு சம்பளத்தொகை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×