search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் கேரள கழிவுகள்- மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடிதம்
    X

    தமிழகத்தில் கேரள கழிவுகள்- மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடிதம்

    • கிராமங்களில் கேரள கழிவுகள் கொட்டப்படுகின்றன.
    • இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேர் கைது.

    கேரளா மாநில மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நெல்லை மாவட்டத்தை ஒட்டிய கிராமங்களில் கேரள கழிவுகள் கொட்டப்பட்டன.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கழிவு கொட்டப்பட்ட விவகாரத்தில் மனோகர் தலைமை ஏஜென்ட்டாக செயல்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

    நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசு பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என தேசிய பசுமைத்தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடிதம் எழுதி இருக்கிறது.

    அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேரள மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு இதுகுறித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது.

    Next Story
    ×