என் மலர்
தமிழ்நாடு
X
10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - சிறப்பு எஸ்.ஐ. போஸ்கோ வழக்கில் கைது
Byமாலை மலர்11 Jan 2025 7:01 PM IST
- ஜெயபாண்டியன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
- சிறப்பு எஸ்.ஐ. ஜெயபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
கார்த்திகை தீபத்தின் போது திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஜெயபாண்டியன், அங்கு கழிவறைக்குச் சென்ற 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், சிறார் நலன் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் மகளிர் போலீசார் சிறுமியிடம் நடந்தவை குறித்து கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து ஜெயபாண்டியன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதனிடையே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X