என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை- மேயர் பிரியா
- சமீபத்தில் 2 நாட்கள் பெய்த மழையால் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியது கண்டறியப்பட்டு உள்ளது.
- சென்னையில் ஒரு சில பகுதிகளில் மோட்டார்கள் மூலம் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
சென்னை:
சென்னையில் அடுத்து வரும் சில நாட்கள் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து சென்னை நகரில் வெள்ளம் தேங்காமல் தடுக்கும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் சமீபத்தில் 2 நாட்கள் பெய்த மழையால் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியது கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னையில் 24 மணி நேரத்திற்கும் மேலாக மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு இனிவரும் நாட்களில் தண்ணீரை விரைந்து அகற்ற முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு சில பகுதிகளில் மோட்டார்கள் மூலம் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அங்கு மோட்டார்கள் அமைத்து மழைநீர் உடனடியாக வெளியேற்றப்படும். இதற்காக மாநகராட்சி தயார் நிலையில் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.