search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.1.60 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X

    ரூ.1.60 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    • கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை, சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
    • நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், முன்னணியினர் கலந்துகொண்டனர்.

    தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா ஆகியோர் தொகுதி நிதியில் 1 கோடி 60 லட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.

    அதன் விபரம் :-

    தென்சென்னை பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில், தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து - மண்டலம் 10, வார்டு 128 இளங்கோ தெருவில், ரூ.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடம், பல்நோக்கு கட்டிடம், மண்டலம் 10 வார்டு 138, அன்னை சத்யா நகரில், ரூ.43 இலட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடிக் கட்டிடம், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து - மண்டலம் 10, வார்டு 128 காமராஜர் சாலையில் 22 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை, வார்டு 138 எம்.ஜி.ஆர் நகரில் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் வளர்ச்சி மையம், என மொத்தம் ரூ. 1,60,58,000 (ஒரு கோடி அறுபது இலட்சத்து, ஐம்பத்தி எட்டு ஆயிரம்) மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை, சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.



    இந்நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் - பெருநகர சென்னை மாநகராட்சி கணக்கு குழுத் தலைவர் கே.கே.நகர் தனசேகரன், பகுதிச் செயலாளர்கள் - மாமன்ற உறுப்பினர்கள் மு.இராசா, கே.கண்ணன், மண்டலக் குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் ரத்னா லோகேஷ்வரன், பொன்.வர.லோகு, செல்வி.நிலவரசி துரைராஜ், மாவட்ட துனை செயலாளர் வாசுகி பாண்டியன், வட்டச் செயலாளர்கள் மு.கோவிந்தராஜன், வி.ஏ.ராஜா, ஜம்பு முருகன், செந்தில்குமார் உள்ளிட்ட வட்டச் செயலாளர்கள், மாவட்ட கழக, பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள், முன்னணியினர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×