search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக சிறப்பு பேருந்து இயக்கம்
    X

    பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக சிறப்பு பேருந்து இயக்கம்

    • தினமும் இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும்.
    • முக்கிய நிறுத்தங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பஸ் இயக்கத்தை கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    பொங்கல் திருநாளை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக 19-ம் தேதி பிற்பகல் முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் அட்டவணைப்படி தினமும் இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும்.

    வரும் 20-ம் தேதி கிளாம்பாக்கத்தில் பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதலாக 500 பஸ்கள் அதிகாலை முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் 482 பஸ்களுடன் சேர்த்து ஆக மொத்தம் 982 பஸ்கள் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர, இன்று பிற்பகல் முதல் 20-ம் தேதி வரை பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம், தாம்பரம் ரெயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு, மாதவரம் புறநகர் பஸ்நிலையம், செங்குன்றம், எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் சென்டிரல் ரெயில் நிலையம் ஆகிய முக்கிய பஸ் நிறுத்தங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பஸ் இயக்கத்தினை கண்காணித்திட உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×