என் மலர்
தமிழ்நாடு
X
புத்தாண்டு கொண்டாட்டம்- மெரினா காமராஜர் சாலை நாளை இரவு மூடல்
Byமாலை மலர்30 Dec 2024 8:11 PM IST
- மெரினா, எலியட்ஸ் கடற்கரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை.
- நாளை இரவு 10 மணி முதல் அனைத்து மேம்பாலங்களும் மூடப்படுகிறது.
புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை போக்குவரத்து காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
அதன்படி, புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலை நாளை இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மூடப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
மெரினா, எலியட்ஸ் கடற்கரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை. முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளன.
நாளை இரவு 10 மணி முதல் அனைத்து மேம்பாலங்களும் மூடப்படுகிறது.
கடற்கரைக்கு புத்தாண்டை கொண்டாட வருவோருக்கான வாகன நிறுத்தங்களுக்கான இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X