search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டம்
    X

    தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

    அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டம்

    • டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
    • டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளித்து மதுரை மக்களை அகதிகளாக்கக்கூடாது.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமம் ஏலம் எடுத்ததாக கூறப்பட்டது. இதற்கு அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.

    இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதன் விவரம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராகவும், தெற்குத்தெரு மேலநாட்டார் மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டி டோல்கேட் அருகே இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. மோகன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    காலையில் தொடங்கிய தர்ணா போராட்டம் மாலை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்றவர்கள் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளித்து மதுரை மக்களை அகதிகளாக்கக்கூடாது. அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    தர்ணா போராட்டத்தை முன்னிட்டு மேலூர் டி.எஸ்.பி. சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×