search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என்னுடைய வெற்றிக்கு தமிழ்நாடு அரசின் பங்கு மிக முக்கியமானது - குகேஷ்
    X

    என்னுடைய வெற்றிக்கு தமிழ்நாடு அரசின் பங்கு மிக முக்கியமானது - குகேஷ்

    • தமிழ்நாடு அரசின் நிதியுதவி எனது வெற்றி பயணத்துக்கு உறுதுணையாக இருந்தது.
    • வெற்றியுடன் திரும்பும்போதெல்லாம் முதலமைச்சர் வாழ்த்துவது மகிழ்ச்சி தருகிறது

    உலக சாம்பியன் குகேஷ்க்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

    விழாவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் கொடுத்து குகேஷ் வாழ்த்து பெற்றார். பின்னர் மரத்தால் செய்யப்பட்ட செஸ் போர்ட்டை முதலமைச்சருக்கு குகேஷ் பரிசாக வழங்கினார்.

    இதனையடுத்து உரையாற்றிய உலக செஸ் சாம்பியன் குகேஷ், "இளம் செஸ் சாம்பியனாக வெற்றி பெற வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியுள்ளது.

    தமிழ்நாடு அரசின் நிதியுதவி எனது வெற்றி பயணத்துக்கு உறுதுணையாக இருந்தது. வெற்றியுடன் திரும்பும்போதெல்லாம் முதலமைச்சர் வாழ்த்துவது மகிழ்ச்சி தருகிறது

    என்னுடைய வெற்றிக்கு தமிழ்நாடு அரசின் பங்கு மிக முக்கியமானது. செஸ் விளையாட்டின் முன்னேற்றத்துக்கு தமிழ்நாடு அரசு அளப்பரிய பணியாற்றுகிறது" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×