என் மலர்
தமிழ்நாடு
சாகித்ய அகாடமி விருது பெறும் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- கலகம் என்பதை 'எழுச்சி' எனப் பதிவுசெய்தவர் ஆ.இரா. வேங்கடாசலபதி
வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908" ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆ.இரா.வேங்கடாசலபதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக Swadeshi Steam நூலை ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்கள் கொண்டு வந்துள்ள வேளையில், அவரது "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908" நூல் சாகித்ய அகாடமி விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது!
கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் 'எழுச்சி' எனப் பதிவுசெய்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு என் வாழ்த்துகள்! பாராட்டுகள்!" என்று பதிவிட்டுள்ளார்.
நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக #SwadeshiSteam நூலை @ARV_Chalapathy அவர்கள் கொண்டு வந்துள்ள வேளையில், அவரது "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908" நூல் #SahityaAkademi விருது பெறுவது இரட்டிப்பு… https://t.co/z6GUxiY6lH pic.twitter.com/lhcUKw4BYF
— M.K.Stalin (@mkstalin) December 18, 2024