search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பள்ளி சிறுமி உயிரிழப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அறிவிப்பு
    X

    பள்ளி சிறுமி உயிரிழப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அறிவிப்பு

    • தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு இரங்கல்.
    • பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவு.

    விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும், பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விக்கிரவாண்டி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த குழந்தை லியா லக்ஷ்மி (வயது 5) த/பெ.பழனிவேல் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்றுவந்த நிலையில் இன்று (03.01.2025) பிற்பகல் பள்ளியிலிருந்த கழிவு நீர்த் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை லியா லக்ஷமியின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×