என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![பள்ளிகளில் தொடரும் பாலியல் சம்பவங்கள்- தமிழக அரசு புகார் எண் அறிவிப்பு பள்ளிகளில் தொடரும் பாலியல் சம்பவங்கள்- தமிழக அரசு புகார் எண் அறிவிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2025/02/12/9231477-anbil.webp)
பள்ளிகளில் தொடரும் பாலியல் சம்பவங்கள்- தமிழக அரசு புகார் எண் அறிவிப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
- அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சமீபத்தில், கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், பள்ளிகளில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல்கள், தொல்லை இருந்தால் தெரிவிக்க வேண்டிய புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாலியல் தொடர்பாக புகார்கள் பள்ளி மாணவ, மாணவிகள் 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தயக்கமின்றி புகார் தெரிவித்தால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல், தேர்வு, உயர்கல்வி வழிகாட்டுதலுக்கும் இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.