search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாலையோர வியாபாரிகளுக்கு ID CARD- நாளை முதல் சிறப்பு முகாம்
    X

    சாலையோர வியாபாரிகளுக்கு ID CARD- நாளை முதல் சிறப்பு முகாம்

    • சிறப்பு முகாம் நாளை முதல் வரும் 30ம் தேதி வரை அனைத்து மண்டலங்களிலும் நடைபெறவுள்ளது.
    • கைபேசி எண் மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, புதிய அடையாள அட்டை வழங்கப்படும்.

    சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நாளை முதல் வரும் 30ம் தேதி வரை அனைத்து மண்டலங்களிலும் நடைபெறவுள்ளது.

    விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக சிப் (CHIP) பொருத்திய, க்யூஆர் கோடு (QR CODE) மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்துதல், சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    நகர விற்பனைக் குழுவின் 06.11.2024 அன்று நடைபெற்ற 8வது கூட்டத்தில் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு (Weblink) பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்குவதற்காக 22.112024 முதல் 30.112024 வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

    மேற்கண்ட சிறப்பு முகாம்களில் மாநகராட்சியால் வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் கைபேசியினை கொண்டு வர வேண்டும். கைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அந்த கைபேசி எண் மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பழைய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு புதிய அடையாள அட்டை வழங்கப்படும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×