என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தீபாவளி பண்டிகை முன்னிட்டு மதுரைக்கு சிறப்பு ரெயில்- தெற்கு ரெயில்வே
- தாம்பாத்தில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
- தாம்பரத்தில் மாலை 5.10க்கு புறப்பட்டு திருச்சி வழியாக மதுரை செல்லும்.
தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் தீபாவளி முன்னிட்டு இரண்டு நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், வார இறுதி நாட்களை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படை எடுக்கின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையொட்டி சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்.29, 30, நவ.02 ஆகிய தேதிகளில் தாம்பாத்தில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரத்தில் மாலை 5.10க்கு புறப்பட்டு விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் வழியாக நள்ளிரவு 1.20க்கு மதுரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முன்பதிவு சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கிய நிலையில், சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு முடிந்தன.