search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மடத்துக்கு இடம் கொடுத்த பெண்ணை மணம்புரிந்த ஆதீனம் தன்னிலை விளக்கம்
    X

    மடத்துக்கு இடம் கொடுத்த பெண்ணை மணம்புரிந்த ஆதீனம் தன்னிலை விளக்கம்

    • நான் கர்நாடக மாநிலத்தில் மடம் தொடங்குவதற்கு ஹேமாஸ்ரீ என்ற பெண் இடம் கொடுத்தார்.
    • சூரியனார்கோவில் ஆதீனமாக இருந்தவர்கள் திருமணமாகிய பின்னரும் ஆதீனமாக செயல்பட்டு வந்துள்ளனர்.

    குத்தாலம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் ஒன்றான சூரியனார்கோவில் ஆதீனம் அமைந்துள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு முதல் இந்த சூரியனார்கோவில் ஆதீனத்தின் 28-வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (வயது 54) பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் பெங்களூருவை சேர்ந்த ஹேமாஸ்ரீ (47) என்ற பெண்ணை கடந்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி பதிவு திருமணம் செய்து கொண்ட சம்பவம் வெளியாகி வைரலாகியது.

    இதுகுறித்து சூரியனார்கோவில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தன்னிலை விளக்கம் அளித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் கர்நாடக மாநிலத்தில் மடம் தொடங்குவதற்கு ஹேமாஸ்ரீ என்ற பெண் இடம் கொடுத்தார். அந்த மடத்தை நிர்வாகம் செய்ய அவரை டிரஸ்டியாக நியமனம் செய்ய ஏதுவாக ஹேமாஸ்ரீயை பதிவு திருமணம் செய்து கொண்டேன். நான் எதையும் மறைக்கவில்லை.

    இதற்கு முன்பு சூரியனார்கோவில் ஆதீனமாக இருந்தவர்கள் திருமணமாகிய பின்னரும் ஆதீனமாக செயல்பட்டு வந்துள்ளனர். சூரியனார்கோவில் ஆதீனத்தில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று எந்த விதிமுறையும் இல்லை.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் காவி வாங்கி ஆதீனகர்த்தராக பதவியில் இருக்கும் ஒருவர் இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடாது என ஆன்மீகவாதிகள் மத்தியில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

    மேலும், 54 வயதாகும் சூரியனார் கோவில் ஆதீனம் திடீரென திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×